download

வெளிநாட்டு வேலைவாய்ப்பு, மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் அமைச்சினால் தொழில் பயிற்சி பெற்ற ஊழியர் படையணி ஒன்றினை உருவாக்கும் நோக்கில் யாழ்ப்பாண மாவட்டத்தில் விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


எனவே, எமது பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தொழில் பயிற்சி பெற்ற அல்லது முறையான தொழில் பயிற்சி பெற்று வெளிநாடு செல்ல விரும்புபவர்கள் தங்களது விபரங்களை தங்கள் கிராம சேவகரிடம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிளையில் (பிரதேச செயலகம்) படிவங்களைப் பெற்று , பூரணப்படுத்தி ஒப்படைக்க முடியும்.

ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிரதேச செயலகத்திற்கு வருவதனை தவிர்த்து Online இல் அப் படிவங்களை பூரணப்படுத்தக் கூடியவாறாக Google Form ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdaV2ZuyGhDTGIsmu60nFsfpvMmS3jPfDV3KWAikyemX_6C3A/viewform?usp=sf_link

இப் படிவம் எமது பிரதேச செயலக வலைத்தளம் (http://www.valikamamsw.ds.gov.lk) மற்றும் முகநூல் ( Divisional Secretariat Sandilipay)  போன்றவற்றிலும் பகிரப்பட்டுள்ளது.

இவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எதிர்காலத்தில் பெற்றுக்கொடுக்கப்பட்டு அதன் மூலம் வெளிநாட்டு நிறுவனங்கள் / முகவர்கள் மூலம் நடாத்தப்படும் நேர்முகப்பரீட்சையில் சித்தியடையவர்கள் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

குறிப்பு: வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் தகைமைகள் தொடர்பான விபரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவு (பிரதேச செயலகம்) /slbfe.lk (http://applications.slbfe.lk/feb/feo/jsearch.asp) என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

மேலதிக விபரங்களுக்கு 0773494551 , 0769290361 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.



பிரதேச செயலகம்,
சண்டிலிப்பாய்

Scroll To Top