144414571 1124431354682768 551335994638509343 o

'பாதுகாப்பான தேசம் - செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளை முன்னிலைப்படுத்தி எமது நாட்டின் 73வது தேசிய சுதந்திரதினவிழா 04.02.2021 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு  சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் எமது பிரதேச செயலாளர் திருமதி.யசோதா உதயகுமார் அவர்களின் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமாகியது. அரச அலுவலர்கள் நாட்டின் சுதந்திரத்திற்கும் அபிவிருத்திக்கும் கடமையாற்றுவதன் அவசியம் பற்றி தனது தலைமையுரையில் பிரதேச செயலாளர் அவர்கள் எடுத்துக் கூறினார். மேலும் இவ்வாண்டுக்கான சுதந்திரதின விழாவின் 'பசுமை' எண்ணக்கருவினை முன்னிலைப்படுத்தி எதிர்கால தலைமுறையினருக்கு மிகவும் பெறுமதி மிக்கதாக பயன்படுத்தக் கூடியதான மரக்கன்றுகள் எமது பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டு காலை 9.29 நிகழும் சுபமுகூர்த்த வேளையில் அலுவலகச் சூழலில் வடதிசை நோக்கி மரக்கன்றுகள் நாட்டும் பணி நடைபெற்றது. 

222   333   

444   555

c   b

132   137

1    2

3     4

5

Scroll To Top