அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாயாராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான புதிய அரசாங்கத்தின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப்பிரகடனத்தின் கீழ் கெளரவ பிரதமர் மகிந்தராஜபக்க்ஷ அவர்களின் ஆலோசனையில் விளையாட்டுதுறை, இளைஞர் விவகார அமைச்சு மற்றும் கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் “செம்மையான முன்னேற்றமிக்க இளைஞர்களை உருவாக்குவோம்” என்ற செயற்றிட்த்தின் அடிப்படையில் கிராமத்துக்கு மைதானம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள “ யூனியன் விளையாட்டுக்கழக மைதானத்தில்” இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் இராமநாதன், இளைஞர் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல்ராஜபக்க்ஷ அவர்களின் வடமாகாண இணைப்பாளர் குலேந்திரன் சிவராம், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், பிரதேச திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், அரச உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலர் Covid - 19 சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கலந்து கொண்டனர்.