Screenshot 2021 07 29 10.55.59

 

"சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களை உருவாக்குதல்" செயற்றிட்டத்தின் தேசிய அங்குரார்ப்பண நிகழ்வானது இன்று பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களால் நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் சௌபாக்கிய உற்பத்திக் கிராமங்களில் ஒன்றான சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று கிராமத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் ,சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் பிரான்பற்று கிராமத்தின் பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

205468636 1215880358871200 3504391129759272433 n    206205050 1215880405537862 1214496679812644309 n

 

200451393 1215880968871139 4335295443702895475 n   205803504 1215881272204442 5402189494599032593 n

 

   

Scroll To Top